தனது நிறுவனத்தைப் பற்றிப் பேசும் போது, அக்ஷய் சொல்வது என்னவென்றால்; ஆன்லைன் நிறுவனம் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு சஸ்ஸெக்ஸ் எனும் இடத்திலிருந்து ஒருவர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். சஸ்ஸெக்ஸில் அவருக்கு ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருப்பதாகவும், தற்போது அதை நல்ல விலைக்கு விற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது என்னிடம் கார் இல்லை, கார் ஓட்டவும் தெரியாது, எனவே இந்திய மதிப்பில் சுமார் 3,500 ரூபாய் கொடுத்து என் மாமாவின் காரை அவரையே இயக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டு சஸ்ஸெக்ஸுக்குச் சென்றேன். என்னிடமிருந்த கேமராவில் வாடிக்கையாளரின் வீட்டைத் தேவையான விதங்களில் எல்லாம் புகைப்படமெடுத்து அதை எங்களது ஆன்லைன் தளத்தில் பதிவேற்றி... நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தேன். அது தான் பிஸினெஸில் என்னுடைய முதல் வெற்றி. பிறகு அந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொண்டேன்.