தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? பிரியங்கா சோப்ரா வருத்தம்

தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற இடம் நியூயார்க். சமீபத்தில் இங்கு மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடந்தேறி உள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:33 am

தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற இடம் நியூயார்க். சமீபத்தில் இங்கு மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதில் எட்டு  நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர், பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் ரோட்டில் டிரக் ஓட்டி வந்த மர்மநபர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அருகே தான் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வீடு இருக்கிறது. குவான்டிகோ (Quantico) எனும் பிரபல தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார் பிரியங்கா. படப்பிடிப்பு முடித்து வீடு திரும்புகையில் சைரன் ஒலி கேட்டு அதிர்ந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘இது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம், அதுவும் என் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி கண் முன்னால் இத்தகைய சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது’ என்று பிரியங்கா தனது டிவிட்டரின் கூறியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.