கடந்த மே மாதத்தில் உலகையே உலுக்கிய இணைய வைரஸ் போலவே இப்போதும் புதிதாக ஒரு மால்வேர், இணைய வைரஸ் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருக்கிறதாம். இந்தப் புதிய மால்வேர், ரஷ்யாவின் உக்ரைனில் விதைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இது, மே மாதத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரிகளின் முக்கியமான டேட்டா ரெகார்டுகள் அனைத்தையும் முடக்கிய இணைய வைரஸுக்கு சற்றும் குறைந்ததல்ல. அப்போதைய இணையத் தாக்குதலின் போது; இணையத் திருடர்கள் எனப்படும் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அளித்தால் மட்டுமே குறிப்பிட்ட மால்வேர்களின் தாக்குதலிலிருந்து சம்மந்தப் பட்ட நிறுவனங்களின் கணினிகள் விடுதலை செய்யப்பட முடியும். என அறிவிக்கப் பட்டிருந்தது.