மும்பையில் சரக்கு ரயில் மோதி இளம்பெண் உயிர் தப்பிய வைரல் வீடியோ!
ரயில் மோதியும் இளம்பெண் உயிர் தப்பிய இந்தக் காட்சிகள் இப்போது அதிசயமான செயலாகக் கருதப்ப்பட்டு தொடர்ந்து இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


மும்பை குர்லா ரயில் நிலையத்தில் கடந்த மே 13 ஆம் தேதி சரக்கு ரயில் மோதி இளம்பெண் ஒருவர் உயிர் தப்பிய காட்சிகள் ரயில் நிலைய சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.
இந்த அதிசயக் காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. சம்பவ தினத்தன்று அந்த இளம்பெண் காதில் Ear phone மாட்டியவாறு நண்பர்களுடன் பேசிக் கொண்டே ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குறுக்கிட்ட சரக்கு ரயிலைக் கண்டு நிலைகுலைந்த அந்தப் பெண் அதிர்ந்து போய், செய்வதறியாது திகைத்து எந்தப் பக்கம் ஒதுங்குவது எனத் தெரியாமல் நேரே ரயிலின் முன்பாகத்தில் சென்று மோதினார். ரயில் மோதிய வேகத்தில் அந்தப் பெண் சக்கரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில் மாட்டிக் கொண்டு அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ரயில் மோதியும் இளம்பெண் உயிர் தப்பிய இந்தக் காட்சிகள் இப்போது அதிசயமான செயலாகக் கருதப்ப்பட்டு தொடர்ந்து இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சி...

Image courtsy: News 7 tamil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...