தெலுங்கானா, கரீம் நகரைச் சேர்ந்த 11 வயது மாணவன் ஒருவன், தனது பெற்றோர் ஐஐடி கோச்சிங்கில் சேர தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தியதில் மனமுடைந்து தான் படித்த பள்ளியின் 2 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கரீம் நகர், சித்தார்த்தா உயர்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவனான குர்ரம் ஸ்ரீகர் ரெட்டி... தன் விருப்பத்தை மீறி, தனது பெற்றோர் தன்னை தொடர்ந்து வற்புறுத்தி ஐஐடி பயிற்சியில் சேர வற்புறுத்தி வந்ததால் மன உளைச்சல் தாங்காது வியாழனன்று காலையில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறான். உயிரிழந்த ஸ்ரீகர் ரெட்டி தனது பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.