அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயில இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் காவேரி நாதமுனி. 17 வயது காவேரி பெங்களூரு சர்வ தேசப் பள்ளி மாணவி. மொத்த இந்தியாவிலும் ஒற்றாஇ நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இந்தப் பெருமை குறித்து காவேரியிடம் பேசுகையில், பாஸ்டனில் இயங்கும் MIT தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பாடப் பிரிவில் சேர்ந்து பயில தனக்கு அட்மிஸன் கிடைத்திருப்பதாகவும், கல்லூரியில் சேர ஆகஸ்ட் மாதம் தான் அங்கே செல்லவிருப்பதாகவும் கூறினார். பெங்களூரு சர்வதேசப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவரான காவேரி கடந்த வாரத்தில் தான், 12 ஆம் வகுப்புகளுக்காக நடத்தப் படும் சர்வதேசப் பள்ளிகளுக்கான IB போர்டு தேர்வில் 45 மதிப்பெண்களுக்கு 44 மதிப்பெண்கள் என உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேறினார்.