பன்னாட்டு வணிக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து ‘டொனேஷன்’ எனும் பெயரில் நிதி உதவி பெறுவதற்காகத் தான் ஜல்லிக்கட்டை இத்தனை தீவிரமாக பீட்டா எதிர்க்கிறது என்பதான குற்றச்சாட்டு ஒன்று அதன் மீது அதன் எதிர்பாளர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் இயங்கும், எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் பேராசைத் தனம் கொண்ட சில என்.ஜி.வோ அமைப்புகளுக்கு இங்கிருக்கும், வறுமை, சுகாதாரமின்மை, பாலியல் வன்முறைகள், மதப் பிரச்சினைகள், இனப் பாகுபாடுகள், ஆன்மீகம் முதலிய எல்லாவற்றையும் அரசியலாக்கி காசாக்கும் வித்தை தெரிந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்று தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அவர்கள் தாம் கற்றுக் கொண்ட வித்தைகளை அவ்வப்போது பரிசீலித்துப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் மக்கள் இவற்றை உணர்வதே இல்லை.