நடிகை கடத்தப் பட்ட விவகாரத்தில் மலையாளப் பட உலகோடு தமிழ் திரையுலகினரும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் நடிகைக்கே இத்தனை பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது எனில் பிற இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த விதத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்? இந்தியா முழுவதுமே மூன்று வயதுக்குழந்தை முதல் பிரபல நடிகை வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் பெண் இனத்தின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலான அச்சமும், கடும் கண்டனமும் நிலவி வருகிறது.