தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிவ சேனா எம்பி, விமான நிலைய அதிகாரியிடம் மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கான பயணத் தடை நீடிக்கும்: அமைச்சர் கஜபதிராஜு!

கெய்க்வாட் விமான நிலைய ஊழியரைத் தாக்கியதற்காக மக்களவையில் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 9:15 am

கடந்த மார்ச் மாதம் ஏர் இந்தியா விமான நிலைய அதிகாரியை சிவசேனா எம் பி ரவீந்திர கெய்க்வாட் தாக்கிய விவகாரத்தில், எம் பி யின் செயலைக் கண்டித்து, இந்தியாவில் எந்த விமானத்திலும் இனி பயணம் செய்ய முடியாதபடி அவருக்கு ஏர் இந்தியா நிர்வாக மேலாண்மை இயக்குனர் அஸ்வனி லொகானியால் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து, இன்று மக்களைவை விவாத நேரத்தில்  விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் கஜபதி ராஜூவுக்கும் சிவ சேனா எம் பி க்களும் இடையே கார சாரமான விவாதம் நடைபெற்றது.

விமானப் போக்குவரத்து துறை அமைச்சரான கஜபதி ராஜூ ‘எத்தனை முறை, எப்படி விவாதித்தாலும், சிவ சேனா எம் பி கெய்க்வாடின் செயலை நியாயப்படுத்த முடியாது. கெய்க்வாட் விமான நிலைய ஊழியரைத் தாக்கியதற்காக மக்களவையில் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லா விட்டால் பொதுமக்கள் மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கும் இவ்விவகாரத்தில் ஏர் இந்தியா எடுத்துள்ள தடை உத்தரவு முடிவை திரும்பப் பெற முடியாது’ எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தப் பதிலால் ஆக்ரோஷமான சிவசேனா எம் பிக்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டு  ‘ தடையை நீக்கா விட்டால் மும்பையின் மேல் எந்த விமானமும் பறக்க இயலாமல் செய்து விடுவோம்’ என காட்டமாகக் கோஷம் எழுப்பியவாறு தங்களது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர். நிலவரம் கலவரமாக மாறும் முன் பிற பாஜக எம்பிக்கள் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூவை சூழ்ந்து பாதுகாப்பு தரவே, அமைதியான முறையில் இப்பிரச்சினையை விவாதிக்கக் கோரிய  மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் வேண்டுகோளுக்கு இணங்கி சர்ச்சைக்குரிய விவாதம் தற்காலிகமாக அமைதியில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.