புதுச்சேரி,
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியை காலி என அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வழக்குரைஞர் எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வேண்டும்.
இந்நிலையில் தற்போது நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் கடந்த 15-ம் தேதி ராஜிநாமா செய்துள்ளார். அப்போது அவர் முதல்வர் நாராயணசாமிக்காக தனது பதவியை விட்டு விலகியதாக தெரிவித்தார். உடனே அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு தொகுதி காலி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது சட்டத்தை மீறிய செயலாகும். அரசு உடனே அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தலைமைச் செயலாளரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.6 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். தேர்தலுக்காக அவர் முதல்வரிடம் பணம் வாங்கியுள்ளார் என புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என சிபிஐயிடம் புகார் அளித்துள்ளேன்.
மேலும் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலை 6 மாதங்கள் கழித்து தான் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்துள்ளேன். இவற்றை நிறைவேற்றாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார் சுப்பிரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

