வல்லாரையில் உள்ள பிற மூலக்கூறுகளான பிரம்மோசைடு மற்றும் பிராமினோசைட் போன்றவை நரம்பு மண்டலத்தின் தளர்வுக்கு காரணமாக உள்ளது. சென்டெல்லாசைடு வேதிப்பொருள் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் (சிரை) பயனுள்ளதாக உள்ளன. டானின்கள் (20-25%), பைட்டோஸ்டெரால்கள் (கேம்பெஸ்டெரால், சிட்டோஸ்டெரால், ஸ்டிக்மாஸ்டெரால்), ரெசின்கள், அமினோ அமிலங்கள் (அலனைன், அஸ்பார்டேட், குளுட்டமேட், லைசின் மற்றும் ட்ரெயோனைன்), ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள ஃபிளாவனாய்டுகள் , ஹைட்ரோகோடின் என்ற அல்கலாய்டு ,வாலரின் என்ற ஒரு கசப்பான மூலக்கூறு , கொழுப்பு அமிலங்கள் (லினோலிக் அமிலங்கள், லினோல்னெலிக், பால்மிடிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள்) போன்ற பல உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலக்கூறுகளின் இயற்கை கலவையாக வல்லாரை கீரை உள்ளது ஆச்சரியத்திற்கு உரியது.