நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தடுப்பூசி மட்டுமே தீர்வாகுமா?

இந்தியா போன்ற - 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு மிகப் பெரிய நாட்டில் கரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பூசிகள் மட்டுமே  தீர்வாகிவிடுமா?

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

ததாகத்

இந்தியா போன்ற - 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு மிகப் பெரிய நாட்டில் கரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பூசிகள் மட்டுமே  தீர்வாகிவிடுமா?

இத்தனை மாதங்களாகத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தும்கூட இன்னமும்  நாட்டின் பெரும்பான்மையான கிராமப்புறங்களுக்குப் பெருமளவுக்குத் தடுப்பூசிகள் சென்றடையவில்லை.

தடுப்பூசி தொடர்பாக வெகுமக்களிடம் இருக்கும் தயக்கம் மட்டுமின்றி, அவர்களைச் சென்றடைவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 7.21 கோடி. இவர்களில் கிராமப்புறங்களில் 3.71 கோடி, நகர், நகர்ப்புறங்களில் 3.49 கோடி. 2021-ல் தமிழக மக்கள்தொகை 8.36 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இந்த நிலைமையில் தமிழகத்துக்கு இதுவரையில் 91.34 லட்சம் தடுப்பூசிகள்  மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் 72.12 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதிய கடிதத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 3.65 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துக்கு மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்காக ஒரு மாதத்துக்கு 2.5 கோடி தடுப்பூசிகள் வீதம், நான்கு மாதங்களுக்கு 10 கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பாலு.

கேரளத்துக்கு 88.69 லட்சம் தடுப்பூசிகளும் மத்தியப் பிரதேசத்துக்கு 1.01 கோடி தடுப்பூசிகளும் ராஜஸ்தானுக்கு 1.61 கோடி தடுப்பூசிகளும் குஜராத்துக்கு 1.62 கோடி தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசோ இதுவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 21.33 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 1.60 கோடி கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த வேகத்தில் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டிருந்தால் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் முயற்சிகள் இப்போதைக்கு முடியாது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தவிர, நாட்டின் நகர்ப்புறங்களை ஒப்பிட கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்துவது என்பது மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது.

பிகாரில் நகர்ப்புறங்களில் சுமார் 60 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் 5 சதவிகிதம் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால், புதிதாக நோய்த் தொற்றும் உயிரிழப்புகளும் 76 சதவிகிதம் கிராமப்புறங்களிலிருந்துதான் வருகின்றன.

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களிலும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.

இந்த நிலையில் ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரைதான் கரோனா தொற்றிலிருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

தவிர, தீவிரமான நோய்ப் பரவல் காலத்தில் இவ்வாறு ஒரே காலகட்டத்தில்  கூட்டம்கூட்டமாகத் தடுப்பூசிகள் செலுத்துவது எல்லா வகையிலும் ஆபத்தானது என்று  எச்சரித்துள்ளார்  2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு நோய்த் தொற்றுயியல் ஆய்வாளா் பேராசிரியர் லூக் மான்டேக்னியர்.

இந்த ஆபத்து பற்றி நோய்த் தொற்றியலாளர்களுக்கு எல்லாம் தெரியும், ஆனால், ஏனோ அமைதி காக்கிறார்கள். இத்தகைய பெருந்தொற்றுக் காலத்தில் இவ்வாறு தடுப்பூசியைச் செலுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு, அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவத் தவறும்கூட என்றும் எச்சரித்துள்ளார். 

ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கியபின், கரோனா தொற்று உருமாறிக்கொண்டே வருவதுடன், நோய்ப் பெருக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பதும் நேரிடுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதை எதிா்ப்பொருள் சாா்ந்த பெருக்கம் (‘ஆன்டிபாடி டிபென்டன்ட் என்ஹான்ஸ்மென்ட்’) என்ற கருத்தாக்கம் என்கிறார்.

மிக எளிதாக, உடனடியாகச் செய்யக்கூடிய பணி, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன்  மேற்கொள்வதுடன்,  வெகு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே.

கபசுரக் குடிநீரில் தொடங்கி எத்தகைய உணவுகளைச் சாப்பிட்டால், அருந்தினால் கரோனா உள்பட எந்தவொரு நோயையும் எதிர்கொள்ளும் ஆற்றல்   உடலுக்குக் கிடைக்கும் என்று அரசே முறைப்படி அறிவித்து இயக்கமாகச் செயற்படுத்தலாம்.

கரோனா உள்ளிட்ட இத்தகைய நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ளக் கூடிய, ஏற்கெனவே நம்மிடமிருந்து, மறந்துபோன அல்லது மறக்கடிக்கப்பட்ட உணவுப் பழக்கங்களையும் மீட்டுருவாக்கலாம்.

தொலைநோக்குடன் கரோனோ உள்பட எந்தவொரு நோய்த் தொற்றையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க மக்களை உருவாக்குவதே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்த்தக் கூடியதாக இருக்கும்.

மற்றபடி, மூன்றாவது அலையில் கரோனா நோய்த் தொற்று, குழந்தைகளை அதிகம் பாதிக்கும்  என்று எச்சரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 130 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த வேகத்தில் நாம் எப்போது தடுப்பூசி செலுத்தி முடிப்போம்?

இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொள்ளும் தடுப்பூசிகளின் வீரியம் சுமார் 8 மாதங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்கிற நிலையில் இரண்டாவது சுற்றுத் தடுப்பூசி செலுத்தும் பணியை எப்போது தொடங்குவோம்? எவ்வளவு காலத்துக்கு?

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மருந்துகள், சித்த, ஆயுர்வேத, ஹோமியோ மருந்துகள் மட்டுமின்றி, திறமான உணவுப் பழக்கங்களையும் கவனப்படுத்த வேண்டிய தருணம் இது.

(இந்த கரோனா நோய்த் தொற்றால் நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, உயிரிழந்திருக்கிறார்களா? இல்லை என்றால் ஏன், எவ்வாறு என ஆராய வேண்டாமா?)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.