கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 17 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பேசியது,
கரோனா பரவலை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மக்கள் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். மாநில அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கூட்டங்கள், பொது மக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து சந்தைகள், சில்லறை விற்பனையாளர்கள், கடைகளும் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
புறநகர் ரயில்களின் இயக்கம் நாளை முதல் நிறுத்தப்படும். மெட்ரோ உள்ளிட்ட மாநில போக்குவரத்து பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


