அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஆமதாபாத்தில் இரவுநேர பொதுமுடக்கத்தின் நேரம் நீட்டிப்பு: திரையரங்குகள் மூடல்

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 மார்ச் 2021, 2:57 pm

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத். ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் மார்ச் 17 முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுமுடக்கம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆமதாபாத்தில் மட்டும் இரவுநேர பொதுமுடக்கமானது இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.