கரோனா குறைந்ததையடுத்து பஞ்சாபில் நாளைமுதல் திரையரங்கு, உணவகம், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கரோனா பரவல் உறுதியாகும் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதையடுத்து பொதுமுடக்கத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகள்:
திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பணியாளர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவுநேர ஊரடங்கானது இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரையும், வார இறுதி நாள் ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரையும் அமலில் இருக்கும்.
மதுபானக் கடைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு

சிறுமி பாலியல் வன்கொடுமை: விவசாயி போக்ஸோ சட்டத்தில் கைது
பலாப்பழ கீர்
வீட்டுக் குறிப்புகள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


