உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், யோகி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனிடையே மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா காங்கிரஸிலிருந்து விலகி புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தில்லி வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நாளை பிரதமர் மோடியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் மற்றும் கரோனாவைக் கையாண்ட விதம் குறித்த பேச்சுகள் ஆங்காங்கே எழுவதால் தலைவர்களிடமிருந்து கருத்தைக் கேட்டு கட்சியைப் பலப்படுத்த பாஜக முடிவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் இன்று திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


