ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கரோனா: கேரளத்தில் நாளை(ஜன.8) மத்தியக் குழு ஆய்வு

கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான மத்தியக் குழு நாளை(வெள்ளிக்கிழமை) செல்கிறது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 4:04 pm

கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான மத்தியக் குழு நாளை(வெள்ளிக்கிழமை) செல்கிறது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அந்தக் குழு வெள்ளிக்கிழமை கேரளம் சென்றடைகிறது. 

கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் இரண்டு நாள்கள் ஆய்விற்கு பிறகு திங்கள்கிழமை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

கரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அதுசார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாள்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுகாதாரப் பணியாளர்களுக்கு போடுவதற்காக 5 லட்சம் கரோனா தடுப்பூசி வேண்டுமென்று மத்திய அரசிற்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.