கடந்த 3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த வழக்கறிஞரும், தகவல் அறியும் ஆர்வலருமான ரஞ்சன் டோமர், 2018 மற்றும் 2020 க்கு இடையில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, 2018 முதல் 2020 நவம்பர் வரை 460 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படை வீரர்கள் 161 பேர் பணியின்போது கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 2020 செப்டம்பரில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
நக்சல்களின் வன்முறை நாட்டில் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது மொத்தம் 46 மாவட்டங்களில் மட்டுமே நக்சல்களின் அச்சுறுத்தல்கள் நிலவுகிறது.
மேலும், நக்சல்களின் வன்முறையால் பலியாகும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டு 1,005இல் இருந்து 2019ஆம் ஆண்டில் 202 ஆகக் குறைந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த இறப்புக்கள் 2017 இல் 263, 2018 இல் 240, 2019 இல் 202 மற்றும் 2020 இல் 102 (ஆகஸ்ட் வரை) என்று அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை

மின்மாற்றியிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் போராட்டம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


