நாடு முழுவதும் பள்ளிகள் ஜனவரி 18ஆம் தேதி முதல் படிப்படியாக திறக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா 2ஆம் அலை தாக்கத்தால் மீண்டும் நவம்பர் 26ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் வருகின்ற ஜனவரி18ஆம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கல்வித்துறை அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
பாகிஸ்தானில் முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 18ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


