கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்ட டிவிட்டர் செய்தி குறித்து விசாரிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், சர்வதேச பாப் நட்சத்திரம் ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவீட் வெளியிட்டனர்.
அவர்களின் டிவிட்டர் செய்தி வெளியானவுடன் கிரிக்கெட் வீரர் சச்சின், உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டினர் பங்குபெற தேவையில்லை என டிவீட் செய்தார். அதன்பின் வரிசையாக பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் டிவிட்டர் செய்தி வெளியிட்டனர்.
இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மத்திய அரசிற்கு ஆதரவாக டிவீட் வெளியிட்டுள்ளதால் அவர்கள் ஏதேனும் அழுத்தத்தினால் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்டார்களா என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகைய்ல்,
மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் மற்றும் பிற தலைவர்கள் புகார் அளித்ததை அடுத்து, மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் டிவீட் செய்யக்கோரி எந்தவிதமான அழுத்தத்திற்கும் உள்ளார்களா என்பதை அறியவே புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிவீட்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒருசில மணிநேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் மற்றும் சைனா நேவால் ஆகியோரின் டிவீட்கள் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றது.
சில டிவீட்களில் ஒரு வார்த்தை கூட மாறாமல் உள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


