/

தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை

தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:51 pm

IANS

தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கத் தடைக்கோரி வழக்கறிஞர் இந்திரா பிரகாஷ் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

மாநில அரசு உடனடியாக பட்டாசு விற்கும் கடைகளை மூடவேண்டும். பட்டாசுகள் விற்பதையும், வாங்குவதையும் தடை செய்ய வேண்டும். உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், அரசுத் தரப்பில் எடுக்கும் நடவடிக்கைகளை நவம்பர் 19 ஆம் தேதி அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.