எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆரோக்கியம் போச்சுனா வாழ்க்கையே போச்சு என்ற வாசகத்துடன் முகக் கவசம்

மணப்பாறையில், நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பொது மக்களுக்கு "ஆரோக்கியம் போச்சுனா... வாழ்க்கையே போச்சு" என்ற வாசகத்துடன் முகக் கவசம் வழங்கப்படுகிறது.

News image
'ஆரோக்கியம் போச்சுனா... வாழ்க்கையே போச்சு' என்ற வாசகத்துடன் முககவசம்
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

மணப்பாறையில், நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பொது மக்களுக்கு "ஆரோக்கியம் போச்சுனா... வாழ்க்கையே போச்சு" என்ற வாசகத்துடன் முகக் கவசம் வழங்கப்படுகிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக,  "ஆரோக்கியம் போச்சுனா... வாழ்க்கையே போச்சு" என்ற வாசகத்துடன் கூடிய பொதுமக்களுக்கு வழங்கபட உள்ள முகக்கவசம் வெளியீடு நிகழ்ச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா முக கவசத்தை வெளியிட, அதை ரஜினி மக்கள் மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் வி.மோகன்தாஸ் பெற்றுகொண்டார்.

ரஜினியின் உருவப்படம் இடம் பெற்றுள்ள "ஆரோக்கியம் போச்சுனா... வாழ்க்கையே போச்சு" என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நகர செயலாளர் விடியோ என்.கணேசன், இணைச் செயலாளர் குமரவிலாஸ் ஏ.சிவக்குமார், துணைச்செயலாளர்கள் எம்.கோகுலகிருஷ்ணன், ஏ.அருளப்பன், எஸ்.கார்த்திக், வழக்குரைஞர் அணிச்செயலாளர் ஜி.கபிரியேல்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் எஸ்.பாண்டியன் மற்றும் மக்கள் நேயம் நோபல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.