‘கட்சியின் பெயரை தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள்’: ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.


ரஜினி கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினி வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி கட்சியின் பெயர் மற்றும் தொடங்கும் நாள் குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையம், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி வெளியிட்ட செய்தியில், மக்கள் சேவைக் கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கியிருந்தது.
கிளிக் செய்யவும்: ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி?
இந்த பெயரும், சின்னமும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியுடையது என்ற செய்தி வெளியான நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் வி.எம்.சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் சின்னம் குறித்து தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...