சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

உ.பி. எல்லைகளில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

News image

தில்லி - காஜியாபாத் நெடுஞ்சாலையில் திரண்ட விவசாயிகள்

Updated On :3 டிசம்பர் 2020, 2:00 pm

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக சென்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காசிப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24-ல் திரண்ட விவசாயிகள்

காசிப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24-ல் திரண்ட விவசாயிகள்

அவர்களுக்கு ஆதரவாக திரளான விவசாயிகள் தில்லி நோக்கி நகரத் தொடங்கினர். இதையடுத்து தில்லிக்குள் விவசாயிகள் நுழையாதபடி மாநில எல்லை மூடப்பட்டது.

மீரட் - தில்லி தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட விவசாயிகள்

மீரட் - தில்லி தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட விவசாயிகள்

இந்நிலையில் மீரட் - தில்லி தேசிய நெடுஞ்சாலை, தில்லி - காஜியாபாத் நெடுஞ்சாலை மற்றும் காசிப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24 ஆகிய எல்லை பகுதியில் திரண்ட விவசாயிகள் தில்லிக்குள் நுழையாதபடி வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இதனால் காவலர்களுக்கும், விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.