தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சம்பளம் இல்லாததால் துணிப்பை விற்கும் ஆசிரியர்

புதுதில்லியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியருக்கு சம்பளம் தராததால் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த சந்தையில் துணிப்பைகளை விற்று வருகிறார்.

News image
வருமானம் இல்லாமல் துணிப்பை விற்கும் ஆசிரியர்(கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

PTI

புதுதில்லியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியருக்கு சம்பளம் தராததால் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த சந்தையில் துணிப்பைகளை விற்று வருகிறார்.

புதுதில்லி ஷாஹ்தாராவில் ஃபைஸி (வயது 30) என்பவர் தனது வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். 

இவர் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று காரணமாக பள்ளியில் சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில், தனது மகள்களின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த வாராந்திர சந்தையில் துணிப்பைகளை விற்று வருகிறார்.

மார்ச் மாத முதல் போடப்பட்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு இந்த வார திங்கள்கிழமை முதல் புதுதில்லியில் சந்தைகளை சோதனை முயற்சியாக ஆகஸ்ட் 30 வரை திறக்க அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து ஃபைஸி கூறுகையில், மார்ச் மாதம் முதல் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது பள்ளிப் பெற்றோர்களும் வேலை இல்லாததால் கட்டணம் செலுத்தவில்லை. அதனால் எனது பள்ளி நிர்வாகம் எனக்கு சம்பளம் தர இயலவில்லை.

ஆரம்ப கட்டத்தில் எனது நண்பர்கள் எனக்கு நிதியுதவி செய்தார்கள். ஆனால் அவர்களிடம் மேலும் கேட்ட இயலவில்லை. 

தற்போது எனது மகள்களின் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்காக எனது நண்பர்கள் தயாரித்த துணிப்பைகளை விற்க சந்தைக்கு வந்துள்ளேன். இதை விற்பதில் வரும் லாபத்தை வைத்து குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என நம்புகிறேன்.

பகலில் எனது மாணவர்களுக்கு இணைய வழியில் பாடம் எடுத்து வருகிறேன். மாலை நேரத்தில் சந்தைக்கு சென்று துணிப் பைகளை விற்கின்றேன். எந்த காரணத்திற்காகவும் எனது மாணவர்களின் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளேன்.  

கரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நானும் ஒருவன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.