தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

புதுதில்லியில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை -கேஜ்ரிவால்

கரோனா தொற்று முழுவதுமாக குறையும் வரை தில்லியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

News image
புதுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

PTI

கரோனா தொற்று முழுவதுமாக குறையும் வரை புதுதில்லியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுதில்லி தலைமை செயலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். 

சுதந்திர தின உரையில் அவர் பேசுகையில், தேசிய தலைநகரான புதுதில்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்த தொற்றை கட்டுப்படுத்த போராடிய முன்கள வீரர்கள் அனைவருக்கும் நன்றி.

ஆம் ஆத்மி அரசுக்கு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. மக்கள் தரப்பில் இருந்து தற்போதைக்கு பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கருத்து எழுந்துள்ளது.

உங்கள் குழந்தைகளை பாதுகாப்போம் என அரசு உறுதியளிக்கிறது. கரோனா தொற்று முழுவதுமாக குறையும் வரை பள்ளிகள் திறக்க போவதில்லை.

டெல்லியின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக புதுதில்லி அரசின் சுதந்திர தின விழா சத்ராசல் மைதானத்திற்கு பதில் தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.