நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆடிப்பெருக்கு தினத்தில் மேட்டூர் காவிரி வெறிச்சோடியது

ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் கூட்டம் இல்லாமல் மேட்டூர் காவிரி வெறிச்சோடி காணப்பட்டது. 

News image
வெறிச்சோடி காணப்படும் மேட்டூர் காவிரி
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

கு. இராசசேகரன்


ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் கூட்டம் இல்லாமல் மேட்டூர் காவிரி வெறிச்சோடி காணப்பட்டது. 

ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணை காவிரியில் நீராட சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்தும் பல ஆயிரம் பேர் வந்து செல்வார்கள்.காவிரியில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்பன் தரிசித்து மேட்டூர் அணை பூங்காவில் விருந்து உண்டு மகிழ்ந்து செல்வார்கள். 

வெளி ஊர்களில் இருந்தும் உள்ளூர் வாசிகளும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை மேட்டூரில் கூடி செல்வார்கள்.

Story image

ஆடிப்பெருக்கு முதல்நாளிலேயே காவேரிபாலம், வொர்க்க்ஷாப் கார்னர், அணைக்கட்டு முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான காவலர்கள், ஊர்காவல் படையினர், என்எஸ்எஸ் மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

இதனால் மேட்டூர் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் கார்கள் பேருந்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பேருந்துகளில் நெரிசல் அதிக அளவில் இருக்கும் அதனால் ஆடிப்பெருக்கில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம்.

Story image

ஆடிப்பெருக்கு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் விதிகளை மீறி பொது மக்கள் கூடுவதை தடுக்க ஏராளமான காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தங்கமா புரியபட்டினம், சேலம் கேம்ப், காவேரி பாலம், வொர்க் ஷாப் கார்னர் பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் காவிரியில் குளிக்க வருவோரை எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அணைக்கட்டு முனியப்பன் கோவில் பூசாரிகளை தவிர பக்தர்கள் எவரும் வரவில்லை. இதனால் அணைக்கட்டு முனியப்பன் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

Story image

வழக்கமாக மக்கள் குளிக்கும் இடமான காவேரி பாலம் படித்துறையும் அணைக்கட்டு முனியப்பன் கோவில் படித்துறையும்வெறிச்சோடி காணப்படுகிறது போலீசுக்கு தெரியாமல் ஓரிருவர் மட்டுமே காவிரியில் நீராடி சென்றுள்ளனர்.மேட்டூர் அணை வரலாற்றில் ஆடிப்பெருக்கு நாளில் காவிரிக்கரை வெறிச்சோடி காணப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் வராததால் அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதிகளில் மீன் வியாபாரம் மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் நடைபெறாமல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.