தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தினமும் 600 தெரு நாய்களுக்கு உணவு: கால்நடைத் துறை

கரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் தினமும் 600 தெரு நாய்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 10:39 am


ஈரோடு: கரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் தினமும் 600 தெரு நாய்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகள், தெருநாய்கள் ஆகியவையும் உணவுக்காக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவின்றி சிரமப்படும் ஆதரவற்ற தெருநாய்கள், மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும் உடல் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுவோர் ஈரோடு பிராணிகள் துயா் தடுப்பு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் தினமும் 600 தெருநாய்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. ஈரோட்டில் மட்டும் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,  இந்திராநகர், கருங்கல்பாளையம்,  கோட்டாட்சியர் அலுவலக பகுதி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் 200 நாய்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் குழந்தைவேலு கூறியதாவது:தமிழக அரசின் உத்தரவின் படி ஊரடங்கு காலத்தில் தெருநாய்கள், கால்நடைகள் பாதிக்காத வகையில் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கான பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏதும் இல்லை.

ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் தெருநாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதையடுத்து பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஈரோடு, கோபி, சத்தி, நம்பியூர், கொடுமுடி, பெருந்துறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 600 தெரு நாய்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.

ஈரோட்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் 200 தெரு நாய்களுக்கு இறைச்சி உணவு, பிஸ்கட் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றது. வழக்கமாக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 140 கால்நடைகள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படும். தற்போது ஊரடங்கு உத்தரவால் 70-க்கும் குறைவாகவே கொண்டு வரப்படுகின்றது. இது தவிர நடுமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.