முஸாபர்பூரில் மூளை அழற்சி நோயால் 128 குழந்தைகள் உயிரிழப்பு!
பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 38


பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிகார் மாநிலம் முஸாபர்பூரில் மூளை அழற்சி நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 108 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை 626 குழந்தைகள், மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் நோய் தொற்று பரவியுள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 108 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேர் என முசாஃபர்பூர் மாவட்டத்தில் 128 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதுதவிர பாகல்பூர், கிழக்கு சம்பரான், வைஷாலி, சமஸ்திபூர் ஆகிய மாவட்டங்களிலும் குழந்தைகள் உயிரிழந்தன.
நோய் பாதிப்பு உள்ள இடங்களில் நீரில் கரைத்து குடிப்பதற்காக இலவசமாக குளுக்கோஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் செலவு, தனியார் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிப்பது என அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் பல இடங்களில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் இலவசமாக முகாம்கள் நடத்தி வருகின்றனர். நோய் பாதிப்பு உள்ள இடங்களில் கூடுதலாக குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...