/

திருமண வீட்டில் நிகழ்ந்த சோகம்: திருமண பந்தல் மீது லாரி மோதி 8 பேர் பலி

பிகார் மாநிலம் லாக்கிசராய் பகுதியில் திருமண பந்தல் மீது லாரி ஒன்று மோதி ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

News image
Updated On :11 ஜூலை 2019, 4:38 am


லாக்கிசராய்: பிகார் மாநிலம் லாக்கிசராய் பகுதியில் திருமண பந்தல் மீது லாரி ஒன்று மோதி ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

பிகார் மாநிலம் லாக்கிசராய் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக சாலையோரத்தில் பந்தல் போடப்பட்டு இருந்தது.  திருமண வீட்டிற்கு வந்தவர் அந்த பந்தலில் அமர்ந்து திருமணத்தை விசாரித்து சென்றபடி இருந்தனர். 

இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த திருமண பந்தல் மீது மோதியது. இதில் பந்தலில் அமர்ந்திருந்த 8 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு பின் லாரியை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுநர் தப்பியோடி விட்டார். 

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Lakhisarai: 8 dead, 6 injured after a speeding truck lost control and rammed into a wedding pandal near the road last night. Injured undergoing treatment. The driver fled from the spot leaving the truck behind. #Bihar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.