புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட விமானப்படை துணைத் தளபதி! 

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோ தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் தொடையில்

News image
Updated On :27 செப்டம்பர் 2018, 7:50 am

புதுதில்லி: இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோ தெரியாமல் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் தொடையில் குண்டடி பட்டுக் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோவின் துப்பாக்கி கைதவறி தற்செயலாக தொடையில் சுட்டுக்கொண்டதில் தொடையில் குண்டடி பட்டுக் காயமடைந்திருப்பதாகவும், தில்லியில் உள்ள ஒரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விமானப்படைத் தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரது உடல் நிலை குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. 

1979 -ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி விமானப்படையில் பைலட்டாக சேர்ந்து தனது சேவையைத் தொடங்கியவர் எஸ்.பி. தியோ. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார். இவர் வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.