மாஸ்கோ: சிரியாவில் 14 வீரர்களுடன் புறப்பட்ட ரஷ்ய போர் விமானம் திங்கள்கிழமை மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.
இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று நேற்று இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது.
சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென ரஷ்ய ஐப்-20 விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்ததை அடுத்து, விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்த 14 வீரர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 எஃப் -16 ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய ஜெட் விமானம் திங்கள்கிழமை 11 மணியளவில் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படிருப்பதால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஏவுகணைகளை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தும் போது தவறுதலாக ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


