புதுதில்லி: தில்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை முதல் கால வரையறையற்ற உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த திங்கள்கிழமை முதல் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, துணை நிலை ஆளுநர் மாளிகை வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இப்போராட்டம் 8-ஆவது நாளாக இன்று திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
மேலும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமையும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் தொடங்கிய கால வரையறையற்ற உண்ணாவிரதம் தொடர்ந்தது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இல்லம் நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) மாபெரும் பேரணியை ஆம் ஆத்மி கட்சி நடத்தினர்.
இந்நிலையில், கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றர். கடந்த நான்கு நாட்களில் 7 கிலோ எடை குறைந்துள்ளதுடன். அவரது உடலின் சர்க்கரை அளவு குறைந்தும், ரத்த அழுத்தம் 110/70 என்ற நிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


