திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மூன்று மாநிலங்கள் இணையுமிடத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு கோயில்: ஆந்திர அரசு கட்டுகிறது

ஆந்திர மாநிலத்தில் மூன்று மாநிலங்கள் இணையுமிடத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆந்திர அரசு சார்பில் முருகன் கோயில்

News image
Updated On :9 பிப்ரவரி 2018, 2:39 am

ஆந்திர மாநிலத்தில் மூன்று மாநிலங்கள் இணையுமிடத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆந்திர அரசு சார்பில் முருகன் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதி குப்பம் தொகுதியாகும். இப்பகுதி ஆம்பூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தனது சொந்த தொகுதியான குப்பத்தில் ஆந்திர முதல்வர் பல்வேறு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளார். திராவிட பல்கலைக்கழகம், அந்திரிநீவா நதிநீர் இணைப்புக் கால்வாய், நன்னியாலா வன உயிரினப் பூங்கா, குப்பம் உள்ளூர் விமான நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, குப்பம் நகர கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெரிய வணிக வளாகம், தமிழக எல்லையில் புல்லூர் கனக நாச்சியம்மன் கோவில் சுற்றுலாத்தலம், ராமகுப்பம் அருகே அமைய உள்ள விளையாட்டு மைதானம் என தனது சொந்த தொகுதி மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.
ஆந்திர மாநிலத்தின் தென்கோடி முனையில் அமைந்து இருப்பது இந்த குப்பம் தொகுதி. குப்பம் தொகுதிக்கு கிழக்கு, தெற்கில் தமிழக பகுதிகளும், மேற்கே தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்க வயல் பகுதியும் எல்லைகளாய் அமைந்து உள்ளன. எல்லை பகுதிகளில் அதிகமாக வசிப்பது தமிழர்களே. அதே போல் குப்பம் தொகுதியில் அதிகமாக தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். ஒருங்கிணைந்த 'மெட்ராஸ் மாகாணமாய் ' இருந்த போதும் தமிழர்களே அதிக அளவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

குப்பம் பகுதியில் ஆடிக் கிருத்திகை, ஆடிப்பெருக்கு, தை கிருத்திகை, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாட குப்பத்துக்கு மேற்கே குப்பத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் குடிப்பல்லி அருகே குடிவொங்கா ( கோவில் கானாறு) எனும் இடத்தில் மலை மீது முருகருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சிறிய அளவில் கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். கோயில் அமைந்துள்ள மலைக்கு மேற்குப் பகுதியில் கர்நாடகப் பகுதிகளும், தெற்கே தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளும் உள்ளதால் பண்டிகை விசேஷம் உள்ளிட்ட விழாக்களை மலையின் மேல் உள்ள முருகர் கோயிலில் அப்பகுதி மக்கள் கொண்டாடி வந்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டும், கோயிலுக்குத் தேவையான வசதிகளை செய்து தரும் பணிகளையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில், அந்த மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக பழைமைவாய்ந்த பழைய முருகன் கோவிலை சுற்றி உள்பிரகாரம் அமைக்கும் பணியும், அதனைச் சுற்றி வெளிப்பிரகாரம் அமைக்கும் பணியும், வெளிப்பிரகாரத்தின் கோவிலை சுற்றி வர நடைபாதையும், நடைபாதையை சுற்றிச் சுவர் அமைப்பதற்கான பணிகளும் இப்போது நடந்து வருகின்றது. அதேபோல் கோவில் மலையடிவாரத்தில் ஆற்றங்கரையில் மொட்டையடிக்க கட்டடம், அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொள்ள தனித்தனி குளியல், கழிப்பறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையின் மீது கோயிலுக்கு நடை பயணமாய் ஏறி வர படிக்கட்டுகள், வாகனங்களில் மலை மீது செல்ல தார்ச் சாலை, கர்நாடக மாநில பகுதி மக்கள் வந்து செல்ல சாலை வசதி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல தங்கும் அறைகள், விருந்தினர் விடுதிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பிரம்மாண்ட கோவிலை கட்டி எழுப்பி வரும் சந்திரபாபு நாயுடு அந்த கோயில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்ய அவ்வப்போது அங்கு வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதற்காக மலைமீது முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் வந்து செல்ல நிரந்தரமாக 'ஹெலிபேட் ' அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில், முருகனுக்கு தமிழகத்தில் உள்ள கோவில்களைப் போல ஆந்திர மாநில குப்பம் தொகுதி கோயிலும் பிரசித்தி பெற்றதாக அமையுமென அம்மாநில மக்கள் கருதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.