முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் நுழைந்தவர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டின் கேட் மீது காரை மோதி அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட நபரை


ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டின் கேட் மீது காரை மோதி அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட நபரை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டின் விஐபி கேட் வழியே எஸ்யூவி ரக காரில் சென்றவர் அத்துமீறி ஒருவர் நுழைந்துள்ளார். நுழைந்தவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் கைகலப்பில் ஈடுபட்டு அவர்களைக் காயப்படுத்தியதாகவும், அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கையை பொருட்படுத்தாது பிரதான வாசலை உடைத்துவிட்டு அத்துமீறி உள்ளே சென்றுதுடன் அங்கே இருந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் அராஜகத்தில் ஈடுபட்டடுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். பின்னர் வீடிற்குள் நுழைய முயன்றுள்ளார். இதையடுத்து முன்னாள் முதல்வரின் பாதுகாப்புக்கு உள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் குப்தா தெரிவித்துள்ளார். .
சுட்டுக்கொல்லப்பட்டவர் பூஞ்ச் மாவடத்தில் வசித்து வரும் முர்ஃபஸ் ஷா என தெரியவந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் தந்தை, தனது மகன் அத்துமீறி நுழைந்தபோது வாயிற்காவலர்கள் யாரும் அப்போது அங்கு இல்லையா? ஏன் அவர்கள் அவரை தடுக்கவில்லை? என்றும் தனது மகனை கைது செய்யாமல் சுட்டுக் கென்றது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...