ஹைதராபாத்: பைக் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்த தெலங்கானா மாநில பெண்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நான்கு பெண்கள் தெலங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா சென்றனர்.
நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர் நாட்டிற்கு சென்றவர்கள், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் வங்கதேசம் என மொத்தம் 17 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையில் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து தெலுங்கான மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த இயக்குநர் மனோகர் கூறுகையில், பெண்களின் பயணத்தின் போது பல்வேறு தர மக்களை சந்தித்து தெலங்கானா மாநில சற்றுலா குறித்தும் இந்தியா குறித்தும் விளக்கியதாகவும் கூறினார். இதுவரை வேறு எந்த மாநிலமும் செய்யாத தனித்துவமான விஜயத்திற்காக பெண்கள் மிகவும் சந்தோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் தனது பயணம் குறித்து கூறுகையில், இந்த பயணம் என்னை புதிதாக்குவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது, நான் எந்த சவாலும் எடுக்க முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறினார்.
சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


