ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ஹைதராபாத்தில் 9 பேர் கைது

ஹைதராபாத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர

News image
Updated On :8 ஏப்ரல் 2018, 3:48 pm

ஹைதராபாத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டி நேற்று சனிக்கிழமை மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீஸாரும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தின் போன்கிர் பகுதியில் சிலர் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராச்சகோட்டா ஆணையர் சிறப்பு படையை அமைத்து நடவடிக்கை உத்தரவிட்டார். 

இதையடுத்து போன்கிர் பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் சிறப்புப் படை போலீஸார் அதிரடியாக சோதனை ஈடுட்டனர். அப்போது கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தலைவன் இர்ஃபான் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

சோதனையின்போது அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து பணம் பெற்று 30 சதவீத கமிஷனுக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.