தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாரத் பந்த் எதிரொலி: ம.பி.யில் 7 பேர் பலி; ரயில்சேவை பாதிப்பு

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள்

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 5:53 am

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் கூறி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று திங்கள்கிழமை(ஏப்.2) பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வன்முறை மூண்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வன்முறை பரவுவதைத் தடுக்க செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தால் வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சாலைகள் வன்முறைக் களமாகக் காட்சியளித்தன. முன்னதாக, பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர், பிண்ட் மற்றும் மொரீனா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள், இருவர் தாக்குர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களும் தொடர இருப்பதாக பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.