புதுச்சேரி: தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, மற்றும் கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி காமராஜர்
சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. தினகரன் அணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், பன்னீர்செல்வி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், உள்பட பலர் பங்கேற்றனர். அதிமுக எடப்பாடி-ஓபிஎஸ் அணி சார்பில் மாநில செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ, ஓம்சக்திசேகர், முன்னாள் எம்.பி. ராமதாஸ், மற்றும் கட்சி நிர்வாகிகள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.
புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண். குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், தொகுதி செயலாளர் சக்திவேல், உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜானகிராமன், துணை அமைப்பாளர் ஏ.கே. குமார், அவைத்தலைவர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய நீதிக்கட்சி
பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதிய நீதிக்கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ்,
பொன்.நடராஜன், கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விசிக சார்பில் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், செயலாளர் அமுதவன் உள்பட நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தலைமையில்
அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் மாநில சிவ.வீரமணி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை போல் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


