புதுச்சேரி: கடந்த 2016}17- ம் ஆண்டில் சென்டாக் மூலம் அல்லாமல் விதிகளை மீறி நிகர்நிலை பல்கலை, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மாணவ, மாணவியரை 2 வாரங்களில் வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ)உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 4 நிகர் நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள், 3 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் 2016}17ம் ஆண்டு மொத்தம் 1050 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் நீட் தேர்வின் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசு விலக்கு பெற்று இருந்தது. இதனால் அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்ட 283 இடங்கள் மட்டும் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டன. தனியார் நிகர் நிலை பல்கலை மற்றும் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டிய 770 இடங்களும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பாததுடன், 30.09.2016}க்குள் சேர்க்க வேண்டும் என்ற மருத்துவ கவுன்சில் விதிமுறையையும் மீறி சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து புதுச்சேரி மாணவர், பெற்றோர் சங்கம் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பியது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மருத்துவ கவுன்சில் கடந்த 7}ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து, புதுச்சேரி தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனருக்கும் அனுப்பியுள்ளது. அதில் 2016-17ம் ஆண்டில் சென்டாக் மூலம் அல்லாமலும், 30.09.16- ம் தேதிக்குப் பின்னரும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை இரண்டு வார காலத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை அறிந்த நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழக மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

