புதுச்சேரி: நிதி வேண்டி மத்திய அமைச்சர்களை முதல்வரும், நாங்களும் எத்தனை முறை அணுகினாலும் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என நலத்துறை அமைச்சர் கந்தசாமி வேதனை தெரிவித்துளளார்.
புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறையில் பணிபுரியும் 11 நல ஆய்வாளர்களுக்கு நல அதிகாரியாக பதவி உயர்வு ஆணைகளை சனிக்கிழமை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் ரூ.250 கோடியை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், ஏற்கெனவே அவர்கள் வைத்திருக்கின்ற மிக்சி கிரைண்டர் வழங்கி தேவையற்ற செலவை செய்தனர். ஜிஎஸ்டியால் பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் மதுபானக்கடைகள் மூடப்பட்டு அரசுக்கு கலால் வரி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எத்தனை முறை அணுகினாலும் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியவில்லை. அரசின் இலவச சிட்டங்கள் அனைத்தும் எங்களது ஆட்சியில் தகுதியானவர்களுக்கே சென்று சேரும்.
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு சென்டாக் உதவி தொகை 100 சதவீதம் வழங்குவோம் எனக் கூறி தான் ஆட்சிக்கு வந்தோம். அது தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியும் அவர் அனுமதி தரவில்லை.
இன்னும் இரண்டு வாரங்களில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வகையில் துறைமுக முகத்துவாரம் ஆழப்படுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

