சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதியும், பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 27-ஆம் தேதி தேர்வு முடிந்துவிட்டது. உயிரியியல் பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவர்களுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது. 10-ஆம் வகுப்பு தேர்வு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) முடிவடைந்தது.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியைத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்துள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது பிழை இன்றி இருக்கவேண்டும் என்றும், மதிப்பெண் கூட்டல் சரியாக இருக்கவேண்டும் என்றும், தவறாக மதிப்பீடு செய்யப்பட்டால் கண்டிப்பாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழ் முதல் தாளுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

