புதுச்சேரி: புதுவையில் பிரபல ரௌடி மொந்தை சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டி பல்வேறு கட்சியினர் மற்றும் இயக்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதன் எதிரொலியாக முதல்வர் நாரயாணசாமி குற்றவாளிகளை ஒடுக்க ஆயுதங்களை பயன்படுத்த லாம் என்றும், குற்றங்களை தடுக்க குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் போலீ சாருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பிரபல 5 ரௌடிகளின் பட்டியல் தயார் செய்ய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டார். அதன்படி ரௌடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் முதலிரண்டு இடங்களில் உள்ள ரௌடிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி புதுவை குமரகுரு பள்ளம் பகுதியை சேர்ந்த பிரபல ரௌடி மொந்தசங்கர் (40) மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பெரியக்கடை போலீஸார் பரிந்துரை செய்தனர். மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததையடுத்து,
ஒரு கொள்ளை வழக்கு சம்மந்தமாக தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மொந்தை சங்கரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தற்கான நகல் வழங்கப்பட்டது. இதனை தொடரந்து மேலும் சில ரௌடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

