புதுச்சேரி புதுச்சேரி ஊசுட்டேரியில் சனிக்கிழமை கள ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டு போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில அரசு பரிந்துரை செய்யாமல் மத்திய அரசே நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததும், அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும் ஆளும்காங்கிரஸ் கட்சியினருக்கு கிரண்பேடி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த 5}ம் தேதி முதல் தொகுதி வாரியாக உண்ணாவிரதப் போராட்டம், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 8}ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர்.
எனினும் ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்பு அதிகாரிகளுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுபோல் உழவர்கரை தொகுதியிலும் கடந்த 15 நாள்களுக்கு முன்பு களப்பயணம் சென்ற போது, தொகுதி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரசாரின் போராட்டம் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஏகேடி ஆறுமுகம் தலைமையில் காந்தி நகரில் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி கொண்டு இருந்தனர்.
அப்போது சைக்கிளில் ஊசுட்டேரியில் இருந்து கிரண்பேடி சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தார். இதனை பார்த்தவுடன் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காத, கிரண்பேடியே புதுச்சேரியை விட்டு வெளியேறு என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஏகேடி ஆறுமுகம் கூறியதாவது:
புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்படவிடாமல் கவர்னர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதனால் புதுச்சேரியில் இருந்து கிரண்பேடி வெளியேற வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது. இதனைத் தெரிவிக்கும் வகையில் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


