சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஆக.15 முதல் புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவை தொடக்கம்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் புதுச்சேரி ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்குகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி : வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் புதுச்சேரி ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்பட்டது. 48 இருக்கைகள் கொண்ட சிறிய ரகவிமானம் இயக்கப்பட்டது. விமானம் முழுமையாக நிரம்பாத நிலையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இத்தொகை சரிவர வழங்கப்படாததாலும், பல்வேறு பிரச்னைகளாலும் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு சிறிய விமான நிலையங்களை இயக்கத்துக்கு கொண்டு வரும் வகையில் உடான் திட்டத்தை தொடங்கியுள்ளது. 500 கி.மீ தூரமுள்ள நகரங்களுக்கு விமானத்தில் செல்ல ரூ.2500 மட்டுமே கட்டமமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதுச்சேரியில் இருந்து சேலம் வழியாக பெங்களுரூவுக்கும், ஐதராபாத், திருப்பதி, கோவைக்கும் விமான சேவையை தொடங்குவது குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி, தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சருடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையே புதுச்சேரி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல், விமான நிலையங்கள் ஆணையம், ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஜூலை 1-ம் தேதி முதல் புதுவை-ஐதராபாத் இடையே விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விமான சேவையை இயக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை 3 முதல் 6 மாதங்களுக்கு அரசு வழங்குவது தொடர்பான திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நிதி செலவின விதிமுறைகள், மத்திய கண்காணிப்பு ஆணைய வழிகாட்டுதல்களை காண்பித்து அனுமதி தரவில்லை. விமான சேவை தொடங்குவதற்கு ஏற்படும் தாமதம் குறித்து தலைமைச் செயலாளர் பரிதா, மத்திய அரசுக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழித்தடங்களில் விமான சேவையை இயக்குவதற்கான இரண்டாவது சுற்று ஏலம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகவும், தலைமைச் செயலர் பரிஜா பேச்சுவார்த்தை நடத்தியதாலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்க ஒப்புக் கொண்டது.

புதுவை அரசு இலவச குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. நாள்தோறும் புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானங்கள் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆகும். புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் செல்ல சென்னைக்கு சாலை மார்க்கமாக செல்லவேண்டும். மேலும் ரயில் மூலம் செல்ல வேண்டும். இனிமேல் நேரடியாக விமானத்தில் ஐதராபாத் பயணிக்கலாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.