சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பாஜக மாநில தலைவர் போல் கிரண்பேடி செயல்படுகிறார்: முதல்வர் நாராயணசாமி புகார்

பாஜக மாநில தலைவர் போல் ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் புதன்கிழமை காலை

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  பாஜக மாநில தலைவர் போல் ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் புதன்கிழமை காலை பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியது:- 

மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய கடிதத்தை கடந்த 1}ம் தேதி மத்திய அரசு குறிப்பிட்டு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பியிருந்தது. அந்த கடிதம் 3}ம் தேதி கிடைக்கப்பெற்றது. ஆனால் அக்கடிதத்தில் நியமன உறுப்பினர்களின் தகப்பனார் பெயர் மற்றும் முகவரி இல்லை.

இதனையடுத்து சட்டப்பேரவைத் தலைவருக்கு அக்கடிதத்தை தலைமைச் செயலர் அனுப்பி பரிசீலனை செய்ய கோரியிருந்தது. இதனிடையே அந்த 3 பேருக்கும் நியமன ஆணையை வழங்கியதாக தெரிவித்தார்.

அவர்கள் அதை வைத்திலிங்கத்திடம் கொடுத்தபோது அரசிதழில் வெளிவந்தவுடன் பதவி ஏற்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்ததார்.

ஆனால், அரசிதழில் வெளிவந்தவுடன் அவர்களை ரகசியமாக அழைத்து ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு பத்திரிக்கையாளர்களை கூட அனுமதிக்கப்படவில்லை.

நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுள்ள சாமிநாதன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தவர். மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்த அவர்களை நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமித்திருப்பது நியாயமல்லை. சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. கிரிமினல் வழக்கு உள்ளவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாமா எனத் தெரியவில்லை.

மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாமா என்பதும் தெரியவில்லை. மேலும் நான் பல முறை தில்லி சென்று கிரண்பேடி விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் என புகார் கூறியிருந்தேன். ஆனால் இப்போது மத்திய அரசே விதிமுறைகளை மீறி செயல்படுகிறது என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.