சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானம்: புதுவை பேரவையில் நிறைவேறியது

புதுச்சேரி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:49 am

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு அனுமதி கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.

அன்பழகன்:  மத்திய அரசு ஏற்கெனவே போட்டியிருந்த அறிவிக்கையை திரும்ப் பெற்று விட்டது. தமிழகத்திலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் இதற்கான தீர்மானம் தேவையா,  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தப் போகிறீர்களா.

முதல்வர் நாராயணசாமி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானத்தை கொண்டு வந்துளளோம். புதுவையிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் இயற்ற அனுமதி கோரி மத்திய உள்துறைக்கு தீர்மானத்தை அனுப்புவோம். இது நிறைவேற்றப்பட்டால் புதுவையிலும் ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் போன்றவை நடத்தலாம். மத்திய உள்துறை அனுப்பும் பதில் நமக்கு பதிவாக அமையும்.

அன்பழகன்  தற்போது இத்தீர்மானம் நிறைவேற்றுவது கேலிக்குரியது. அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன்: இத்தீர்மானம் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

அமைச்சர் ஷாஜகான் -வருங்காலங்களில் எவரேனும் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. அதனால்தான் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.