தமிழக ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி
தமிழக ஆளுநர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.


தமிழக ஆளுநர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். புதுவை அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் தனியார் சொகுசு விடுதியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை தெருத்தெருவாக ஓட்டுக்காக கொண்டு வந்தனர். தனக்கு மக்கள் செல்வாக்கு தொண்டர் செல்வாக்கு உண்டு என்பதை மேலூரில் தினகரன் நிரூபித்து காட்டினார். சென்னையில் நடந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை 50 பேருக்கு மேல் நிராகரித்தது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.
எங்களுக்கு வீரமும் விவேகமும் நிறைந்த தளபதி (தினகரன்) கிடைத்துள்ளார். ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் டில்லிக்கு காவடி எடுக்காமல் பெங்களூரில்
சசிகலாவிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மத்திய அரசு மாநில அரசு இணக்கமாக இருப்பது தேவைதான். ஆனால் ஒரு கட்சி இன்னொரு கட்சியை சாருவது கூடாது. எந்த செல்வாக்கும் இல்லாத கட்சி எங்கள் கட்சியை மிரட்டக்கூடாது.
தமிழக ஆளுநர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். எங்களை இன்னும் அழைக்காமல் இருக்கின்றார் ஆளுநர். தமிழகத்தில் விரைவில் அடிமையாக இல்லாத, தைரியமான ஒருவர் தான் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்றார் ரத்தினசபாபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...