புதுச்சேரி: முதல்வர் இபிஎஸ்}ஓபிஎஸ் பிரிவுகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் தங்குவதற்காக வந்து சேர்ந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக 3 அணிகளாக பிளவு பட்டது. முதல்வர் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தலைமையில் 132 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் இபிஎஸ்}ஓபிஎஸ் பிரிவுகள் திங்கள்கிழமை இணைந்தன. இதற்கு டிடிவி தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளத. அவரது அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை இபிஎஸ் அரசுக்கு தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கூறி ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
இந்நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளதாக பிற்பகல் முதலே தகவல்கள் பரவின. இதற்கிடையே சிறு சிறு குழுக்களாக எம்.எல்.ஏக்கள் புதுவைக்கு வந்தனர்.
புதுச்சேரி அருகே சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில் உள்ள விண்ட்ப்ளவர் தனியார் விடுதியில் தங்க உள்ளனர். இதற்காக ஹோட்டலில் மொத்தம் 20 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், முத்தையன், தங்கதுரை, , உமாமகேஸ்வரி, பார்த்திபன் ஆகியோர் வந்தனர். அங்கு எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக வந்துள்ளோம். ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தோம். புதுச்சேரிக்கு ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்காக வந்துள்ளோம்.
எங்களுடன் துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் வந்து தங்குவார். எதிரணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களும் எங்கள் அணியில் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும். பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு வந்துள்ளதாக உடனிருந்த பார்த்திபன் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


