சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சென்டாக் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பாதிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:34 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 95 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதவது:

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர்க்கப்பட்ட 95 மாணவ, மாணவியரை விடுவிக்க எம்சிஐ உத்தரவிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட 40-க்கு மேற்பட்ட மாணவர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதில் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 மாணவர்கள், இடங்களை மாற்றிக் கொண்ட 6 மாணவர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 31 பேரும் அடங்குவர். மொத்தம் 49 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்துக் கொண்டு நாளை தில்லிக்கு
சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், எம்சிஐ தலைவரிடம் அளிக்க உளளேன். அவர்களின் சேர்க்கை, கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும்.

புதுச்சேரியில் நீட் தகுதி அடிப்படையில் தான் மருத்துவக் கலந்தாய்வு முற்றிலும் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும் நாளிலேயே அல்லது அதற்கு பின்னரோ புதுச்சேரியில் கலந்தாய்வு நடைபெறும் என்றார் மல்லாடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.